1,137 உள்ளூராட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கிய UNP

ஐக்கிய தேசியக் கட்சியின் 1,137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதன் காரணமாக அவர்களது கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடுகின்றனர்.