எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கு முழுவதும் எழுச்சி பேரணி

(LBC தமிழ்) இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திகதியை (04.02.2023) கரிநாளாக பிரகடனபடுத்தி பேரணி ஒன்றினை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழர்களுக்கான “அரசியல் தீர்வினை வலியுறுத்தியும் இதுவரையில் தீர்வு காணப்படாமல் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேரணியானது யாழ் பல்கலை கழகத்திலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு வரை செல்லவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கினறனர்.
யாழில் இருந்து ஆரம்பமாகும் இப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக அனைத்து தமிழ் மக்களையும் அரசியல் கட்சியினரையும் அணி திரண்டு வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.



