நாட்டில் 58 பாதாள கும்பல்கள் உள்ளது- பதில் பொலிஸ் மா அதிபர்

நாட்டில் 58 பாதாள உலகக் கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன என்பதுடன், அவற்றுக்கு சுமார் 1,400 பேர் உதவியாளர்களாக செயல்படுகின்றனர் என்று புலனாய்வுத் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள தகவல் மற்றும் ஊடக அமைச்சில் சனிக்கிழமை (22) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

2024 ஆம் ஆண்டு இதுவரை 75 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 18 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன. மேலும், இந்த ஆண்டில் இதுவரை 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 5 கத்திக்குத்துச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) நடைமுறையில் இருப்பதால், சந்தேகநபர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும், இதன் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல சிக்கலற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.