உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்க 2 வழிகளை மட்டுமே உள்ளது – தேர்தல் ஆணைக்குழு தலைவர்
(LBC தமிழ்) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவின் கருத்துப்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போட இரண்டு வழிகள் மாத்திரமே உள்ளது.
அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாகவோ அல்லது நீதிமன்ற உத்தரவின் மூலம் மாத்திரமே தேர்தலை இனி ஒத்திவைக்க முடியும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் கூறினார்.
புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கீழும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் எனவும், தேர்தல் சட்டத்திற்கு அமைய தற்போதைய ஆணைக்குழுவின் தீர்மானத்தை மாற்றுவதற்கு புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அதிகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.