வடக்கு கிழக்கில் நாளை போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை (24.04.2023) செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கலின் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் முன்னெடுக்கப்படாதென போக்குவரத்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நாளை நிர்வாக முடக்கலுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் போக்குவரத்துச் சங்கங்கள் அறிவித்துள்ளன.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தியும், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி நாளை நிர்வாக முடக்கல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.