யாழ் நகரில் இளைஞனை கொடூரமாக தாக்கிய மேலும் மூவர் கைது
யாழ்ப்பாண நகர் பகுதியில் வைத்து புத்தாண்டுக்கு முதல் இரவு இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர்களில் மூவர் இன்று செவ்வாய்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
தலைமறைவாக இருந்தவர்கள் யாழ் நகரில் நடமாடுவதாக குற்ற தடுப்பு பிரிவு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்தினம் (31) இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டிய இளைஞர்கள் குழுவினர் ஒருவரை கடுமையாக தாக்கியிருந்தனர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டன.
அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதான மூவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.