கொள்கை வேறு, கோட்டை வேறு ஆனாலும் சம்பந்தனுக்கு அஞ்சலி – டக்ளஸ் இரங்கல்
கொள்கை வேறு, கோட்டை வேறு ஆனாலும் அஞ்சலிகள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முகநூல் ஊடாக தமிழரசின் பெரும் தலைவர் சம்பந்தனுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் வயதில் எமக்கு மூத்தவர். கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் அரசியல் தளத்தில் எம்முடனும் சம காலத்தில் பயணித்தவர்.
முரண்பாடுகள் இருப்பினும் காணும் பொழுதுகளில் அரசியல் நிலைமைகள் குறித்து
கலந்துரையாடுவதுண்டு. வயது மூப்பின் காரணமாக அவர் மரணித்திருந்தாலும் அச்செய்தி
துயரை தந்துள்ளது. அவரது இழப்பில் துயருறும் சகலருக்கும் ஆறுதல் கூறுகின்றேன்.
அஞ்சலி மரியாதை! என உள்ளது.