திருகோணமலை படகு விபத்து! இதுவரை 10பேர் பலி! (Photos)

திருகோணமலை, குறிஞ்சாக்கேணி படகு பாதையில் இன்று இடம்பெற்ற விபத்தில் தற்போதுவரை சிறுவர்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படகில் 20 பேர் வரை பயணித்த நிலையில் தற்போதுவரை 17 பேர்  மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காப்பாற்றப்பட்டவர்களில் பாடசாலை மாணர்வர்கள் மூவர் அடங்குவதாக  கடற்படை அறிவித்துள்ளது.

காணாமற்போன ஏனையோரை மீட்கும் பணிகளில், கடற்படையின் சிறப்பு படையணி, உடனடி செயல்பாட்டுப் படையணி, கடற் படையணி போன்ற சில சிறப்பு அணிகளும், சுழியோடிகளைச் சேர்ந்த 8 குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக அதிகாரி தெரிவித்தார்.

கிண்ணியா  குறிஞ்சாங்கேணி பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றமையினால் மக்களுக்கான போக்குவரத்துக்காக குறித்த ஆற்றை  கடப்பதற்கு இழுவை படகினை பயன்படுத்தி வந்தனர்.

தினமும் இந்த இழுவைபடகின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் இன்றுகாலை இவ்அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த பால புனரமைப்பு பணிகள் 750 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்அனர்த்தம் நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.