6 வயது பள்ளி சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவர் கைது

6 வயது பாடசாலை சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு சந்தேகநபர்கள் ஜூன் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் STI மற்றும் மனநல மருத்துவ மனைகளில் சமர்ப்பித்து வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் குழந்தையைக் கைவிட்டுச் சென்றதாகவும், அவனது தந்தை தீவிர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளது.
பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தை, போதைக்கு அடிமையான தந்தையின் நண்பர்கள் இருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் சிறுவனுக்கு போதைப்பொருள் கொடுத்து அவரது வீட்டில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குழந்தை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.