யாழ்ப்பாணத்தில் 1,600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 1,600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையின் போது, அவர்கள் வைத்திருந்த 1,600 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.