புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை செய்த இருவர் கைது

புதுக்குடியிருப்பு நகர பகுதியில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் நேற்று (28) புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் தயாரிக்கப்பட்ட கசிப்பு புதுக்குடியிருப்பு நகரில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர். ஹேரின் வழிகாட்டுதலின் பேரில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது, விசுவமடு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 55 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணையின் பின்னர் இன்று (01) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.