கிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி
திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகி பாலத்தில் விழுந்துள்ளது. இதன் காரணமாக இருவர் மரணித்துள்ள நிலையில் இன்று (02) சடலமாக மீட்கப்பட்டனர்.
மரணித்தவர்கள் இருவரும் திருகோணமலை நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்டன் சாந்தன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சசிகரன் சிம்புரதன் ஆகிய இருவரின் சடலங்கலே இவ்வாறு மீட்க்கப்பட்டது.
இன்றைய தினம் இவர்களது சடலத்தினை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஸ்மாயில் ஜெமின் அவர்கள் முன்னிலையில் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக குறித்த உடலங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் இறந்தவர்களிடமிருந்து 71,100 ரூபாய் பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது