உதயநிதி ஸ்டாலினை திடீரென்று சந்தித்த வைகைப்புயல்!!
![](https://lbctamil.com/wp-content/uploads/2021/12/00.00.00.00.01.png)
தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலினை திடீரென்று நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் வடிவேலு, நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை இன்று நட்பு ரீதியாக சந்தித்து பேசியிருக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது