விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கும் கொள்கை எம்மிடம் இல்லை, JVP அறிவிப்பு
விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கும் கொள்கை எதுவும் தேசிய மக்கள் சக்தியிடம் இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலிலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலிலோ தமது கட்சியின் விஞ்ஞாபனங்களில் அவ்வாறான குறிப்புகள் எதுவும் இல்லை என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து தேசிய மக்கள் படை வெற்றிபெறும் என்பது உறுதியாகியுள்ள பின்னணியில், அச்சம் கொண்ட குழுக்கள், எமது அறிக்கைகளின் பகுதிகளையும், உரைகளின் வார்த்தைகளையும் திரிபுபடுத்தி, பொய் பிரசாரம் செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் பெண்கள் உடலை விற்று பிழைக்கும் தொழிலை இந்த சமூகத்தில் இருந்து இல்லாமல் செய்வதே எமது கட்சியின் கொள்கை ஆகும் என மேலும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.