கொழும்பில் கஜேந்திரகுமாருக்கு என்ன பிரச்சினை?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போது இனவாதத்தை பரப்பிவருகின்றார். அவர் கொழும்பில் தான் வாழ்கின்றார். கொழும்பு மக்கள் அவருக்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் சமஷ்டி தீர்வு கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார் என ஜனசத்த பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்

அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல வேண்டிவரும் என தெரியாது என சீலரத்தன தேரர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடக்குக்கு சென்று மக்கள் ஏன் தவறாக வழிநடத்த வேண்டும்? அதுமட்டுமல்ல இந்திய பிரதமருக்கு கடிதமொன்றையும் அவர் அனுப்பியுள்ளார். சமஷ்டி முறைமைக்கு அழுத்தம் கொடுக்குமாறு அக்கடிதம் ஊடாக கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜேந்திரகுமாரின் தேவைக்கேற்ப 13 ஐ நடைமுறைப்படுத்தவே, அதிகாரத்தை பகிரவோ ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக்கூடாது.கஜேந்திரகுமார் இனவாதத்தை தூண்டினால் நாம் சும்மா இருக்க மாட்டோம். பிறகு அவருக்கு எங்கு செல்ல வேண்டிவருமோ தெரியவில்லை.

இனவாதத்துக்கு இடமளிக்ககூடாது. இனவாதத்தை தூண்டினால் நாடு முன்னேறாது. டயஸ்போராக்களின் கோரிக்கைக்கேற்பவே கஜேந்திரகுமார் சமஷ்டி கோருகின்றார்.

டயஸ்போராக்களிடம் பணம் வாங்கினால் பரவாயில்லை, ஆனால் இனவாதத்தை தூண்ட இடமளிக்கமாட்டோம். வடக்கில் உள்ள விகாரைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என சீலரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.