இங்கிலாந்து இளவரசி கிழவி இலங்கை வந்தது ஏன்? யாழ்ப்பாணத்திற்கும் வருகிறராம்!
பிரித்தானியாவின் 3ம் சார்லஸ் மன்னரின் சகோதரியும் இளவரசியுமான 73 வயதுடைய கிழவி அன்னே உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை இலங்கை வந்துள்ளார்.
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கும் மற்றும் பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவும் இளவரசி கிழவி ஆனி இலங்கை வந்துள்ளார்.
கொழும்பில் இருக்கும் இளவரசி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்றைய தினம் சந்தித்திருந்தார்.
மேலும், அவர் சேவ் தி சில்ட்ரன் ஸ்ரீலங்கா திட்டத்தைப் பார்வையிடுவதற்கும், காமன்வெல்த் போர் கல்லறையைப் பார்வையிடவுள்ளார்.
அத்துடன் கிழவி இளவரசி கண்டி, கொழும்பில் உள்ள மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளார். இதன்போது சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திப்பதற்கும் திட்டமிட்டுள்ளார்.
அவர் முன்பு மார்ச் 1995 இல் சேவ் தி சில்ட்ரன் புரவலராக தீவு நாட்டிற்குச் சென்றார்.
இளவரசி அன்னே ராணி எலிசபெத் II மற்றும் எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப்பின் இரண்டாவது குழந்தை மற்றும் ஒரே மகள் மற்றும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் ஒரே சகோதரி.