மும்பை அணியில் தொடர்ந்து இருப்பாரா ரோகித் சர்மா?
பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். மேலும், அணிகள் தக்கவைக்கவிருக்கும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அடுத்த ஐபிஎல் சீசனில் வேறொரு அணியில் விளையாடுவார் என்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்து வருகின்றன. ஆனால், தற்போது கிடைத்த தகவலின்படி, மும்பை இந்தியன்ஸ் அணி தனது அணியில் நான்கு முக்கிய வீரர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ளது. இதில், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தக்கவைக்கப்படுவர் என கூறப்படுகிறது.
முந்தைய சீசனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்த முடிவிற்கு மும்பை ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதோடு, 2024 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் நான்கு வெற்றிகள் மட்டுமே பெற்று, கடைசி இடத்தைப் பிடித்தது.
இந்த புதிய கட்டமைப்பால் மும்பை இந்தியன்ஸ் அடுத்த சீசனில் தங்கள் தரத்தை மீட்டெடுக்குமா என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.