24, 25 ஆம் திகதிகளில் மழையுடன் காற்று
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளையும் நாளை மறுதினமும் இலங்கை ஊடாக பயணிக்கலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து மணிக்கு 420 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்கு நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இதனால் 24, 25 ஆம் திகதிகளில் நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காற்று வீசலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வடகிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று இடையிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.