காணித் தகராறால் இளம் யுவதி வெட்டிக் கொலை

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டுவனைப் பிரதேசத்தில் காணித் தகராறு காரணமாக 22 வயதான இளம் யுவதி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றது.
இதுகுறித்து கிடைக்கும் தகவலின்படி, காணி தொடர்பான தகராற்றில் உறவினர்கள் இடையே வாள்வெட்டுச் சம்பவம் உருவாகியதாகக் கூறப்படுகிறது. இதில் சிக்கிய இளம் யுவதி உட்பட சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த யுவதி, அவரது தந்தை மற்றும் சகோதரர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படினர். ஆனால், சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி உயிரிழந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையில், உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



