யாழில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் ஒருவர் கொழும்புத்துறை பகுதியில் நீண்டகாலமாக போதை மாத்திரை விற்பனை செய்வதாக யாழ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.
இதன்போது 30 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இளைஞரை யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.