சுன்னாகத்தில் பொலிஸாரின் அராஜகம்: ஜனாதிபதி அநுர குமார அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்
சுன்னாகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பொலிஸ் துஷ்பிரயோக சம்பவத்துக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், சுன்னாகம் பொலிஸ் அதிகாரிகள் சிறு குழந்தையை தூக்கி வீசி தங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். ஊழலை ஒழிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்ட இந்த அரசு பொலிஸ் அதிகார துஷ்பிரயோகத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
யாழ் மாவட்டத்தில் நடைமுறைக்கு வரும் அனைத்து அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் விசாரணை ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் மக்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
யாழ் மாவட்ட குடிமகனாக இந்த கோரிக்கையை முன்வைக்கும் தமக்குப் போலியசின் அதிகார துஷ்பிரயோகம் போல் சம்பவங்களுக்கு நீதிச் செயல்பாடு இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும், ஊழலற்ற அரசை உருவாக்க உதவ தயார் என்றும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.