தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்துள்ளது – யாழில் சீன தூதுவர்
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்துள்ளார். அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மக்கள் சக்தி அதிகூடிய விருப்ப வாக்குகளை பெற்றுள்ளதைக் காணும்போது, தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை வெளிப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இது இனங்களிடையே ஒற்றுமையும் பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தும் ஒரு குறியீடாக இருக்கும் என்று சீன தூதுவர் கூறியுள்ளார்.
இலங்கை சீனாவுடன் நீண்டகால நண்பகல் உறவு கொண்டுள்ள நாடு ஆகும். இலங்கை அரசாங்கம் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் சீனா மதிக்கிறது. மேலும், இந்தியா இலங்கையின் மிக நெருக்கமான அயல் நாடாக உள்ளது, ஆகையால் இந்தியா மற்றும் இலங்கையின் பொருளாதார உறவு வலுப்படுவதை சீனா விரும்புகிறது.
மேலும், வடபகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும், சினோபாம் தடுப்பூசிகள், உலர் உணவு பொருட்கள், மீன் வலை போன்ற பல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், வடபகுதி மக்களுடன் நல்ல உறவை மேம்படுத்த விரும்புகிறோம் என அவர் தெரிவித்தார்.