நாளை நள்ளிரவு முதல் இரு வாரத்திற்கு நாடு முடக்கம்? உண்மை விபரம் உள்ளே!
மிகவேகமாக தொற்று பரவல் இடம்பெற்று வரும்நிலையில் முழு இலங்கையினையும் முடக்குவதற்கு ஜனாதிபதி கோத்தாவினால் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் குறிப்பிடப்பட்ட விடயமாவது,
இலங்கையினை முடக்குமாறு சுகாதாரதரப்பு, அரச தரப்பு என பல தரப்புக்களும் தொடர் அழுத்தத்தினை கொடுத்து வருகின்ற நிலையில் நாளை நள்ளிரவு முதல் இரு வாரங்களுக்கு பொது முடக்கம் அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுகிறது.
சுகாதார பிரிவினர ஆலோசனைகளை கருத்தில் எடுத்து நாளை நள்ளிரவு முதல் நாட்டை முடக்க ஜனாதிபதி தீர்மானத்தினை எடுத்துள்ளார்.
இதன் போது மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய தலைமையில் உயர் அதிகாரிகளோடு அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கொழும்பு ஊடகம் வெளியிட்ட செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினை எமது செய்திபிரிவு தொடர்பு கொண்டு வினவியது. தற்போதுவரை நாட்டினை முடக்குவது குறித்து தீர்மானம் ஒன்றும் எடுக்கப்படவில்லை எனவும், இன்று மாலையில் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகுமெனவும் ஜனாதிபதி செயலகம் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடதக்கது.