பெருவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 17 பேர் பலி; 3 தினங்களுக்கு ஊரடங்கு அமுல்

(LBC Tamil)

Peru: பெருவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர்.  

பெரு ஜனாதிபதி Dina Boluarte மூன்று தினங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். 

தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த Pedro Castillo ஊழல் வழக்கில் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, மூத்த பெண் அரசியல்வாதியான Dina Boluarte அதிபராக பதவியேற்றார். 

இதனால் Pedro Castillo ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்ய வேண்டும், அதிபர்  Dina Boluarte தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி Pedro-வின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே, பெருவின் தென் கிழக்கில் ஜூலியாகா நகரில் உள்ள விமான நிலையம் அருகே அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. 

விமான நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்களை பொலிஸார் கட்டுப்படுத்த தடியடியும் கண்ணீர்ப்புகை பிரயோகமும் நடத்தினர். 

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் 17 பேர் பலியானதைத் தொடர்ந்து, பெருவில் ஊரடங்கை அந்நாட்டின் அதிபர்  அமுல்படுத்தியுள்ளார். அதன்படி அடுத்த 3 தினங்களுக்கு ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.