முல்லைத்தீவில் கடல் தொழிலுக்கு சென்ற மூவரை காணவில்லை
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற மூன்று கடல் தொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில் உறவினர்களால் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த செவ்வாய்கிழமை நண்பகல் புதுமாத்தளன் கடற்கரையில் இருந்து கடல் தொழில் நடவடிக்கைக்காக மூவர் சென்றனர்.
உடையார் கட்டு வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரும், திருகோணமலையை சேர்ந்த ஒருவரும், மன்னாரினை சேர்ந்த ஒருவரும் சென்றுள்ளனர்.
இவர்கள் நேற்று புதன்கிழமை மாலை வரை கரை திரும்பாத நிலையில் அவர்களை காணவில்லை என புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.