வைத்தியர்களது ஓய்வூதிய வயது நீடிக்கப்பட்டது!
அனைத்து அரச வைத்தியர்களும் ஓய்வூதியம் பெற்று செல்லும் வயது 63ஆக நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயது எல்லையை அதிகரிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அரச சேவையில் ஈடுபட்ட மருத்துவர்களது கட்டாய வயது எல்லை 60 ஆக காணப்பட்டது. எனினும் கடந்த ஆண்டு அது 61 வயதாக நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போதைய அரசினால் 63ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.