நீக்கப்பட்ட 175 பேருந்துக்கள் மீளவும் சேவையில் இணைந்தன
இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) நிராகரிக்கப்பட்ட 175 பேருந்துகள் பழுது நீக்கப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 175 பேரூந்துகள் பழுது காரணமாக நீக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தகவல் பெற்றிருந்தார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளின் விளைவாக உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தால் இந்த பேருந்துகள் சேவையில் இருந்து நீக்கப்பட்டன. இது குறித்த ஆவணங்களை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதியிடம் கையளித்தார்.
போக்குவரத்து அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய பொது திறைசேரி ஒதுக்கீட்டின் மூலம் நிதி வழங்கப்பட்டது.
3 ஆண்டுகளுக்கு மேலாக சேவையில் ஈடுபடாத 852 பேருந்துகளில் 400 பேருந்துகளை சீரமைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 175 பேருந்துகள் கிட்டத்தட்ட 300 மில்லியன் செலவில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த 175 பேருந்துகளில் 15 பேருந்துகள் “சிசு சீரிய” திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்திற்காக வழங்கப்படவுள்ளது. மீதமுள்ள பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய ஒப்படைக்கப்படவுள்ளது.