தமிழ் கைதிகள் 35 பேர் சிறையில் வைத்து சிங்கள கைதிகளால் வெட்டி கொலை!
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்கள கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது.
இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக 1983 ஜூலை மாத இறுதி பகுதியில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வே இந்த சிறைச்சாலை படுகொலைகள் ஆகும்.
இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்..
ஜீலை 25ம்திகதி 35பேர் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்தி படுகொலை செய்யப்பட்டனர்.
அதன் பின் ஜீலை 28ம் திகதி அன்றே அதே வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து மேலும் 18பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனை அப்போதைய அரசு இயந்திரம் வேடிக்கை மட்டுமே பார்த்தது. இன்றுவரை இந்த படுகொலை நிகழ்வினை நடத்திய எவரும் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.