திருகோணமலை-மட்டக்களப்பு வீதி விபத்தில் 29 பேர் காயம்

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர், இருதயபுரம் பகுதியில் இன்று (01) இடம்பெற்ற விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

மினுவாங்கொடையிலிருந்து சேருவில் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு யாத்திரீகர்களை அழைத்துச் சென்ற ஒரு பஸ், அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் 29 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் பெண்களும் மூன்று சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.