32 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களின் மூன்று மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் மன்னாருக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பரப்பில் 14 மீனவர்கள் மற்றும் அவர்களின் 2 மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இலங்கை கடற்படையால் அவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 32 இந்திய மீனவர்களும், 5 மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை ஊடகப்பிரிவு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும், மன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடல் பகுதியில், ஐந்து மீன்பிடி படகுகளில் இருந்த மீனவர்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.