நவாலி கிணற்றில் ஆண் ஒருவரின் சடலம்
யாழ்ப்பாணம், நவாலி – மூத்தநயினார் கோவிலிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் ஆனைக்கோட்டை பகுதியை 32வயதுடைய நவரத்தினம் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மதுபோதையில் இருந்த அவர் கிணற்றில் விழுந்தவேளை அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.