சர்வதேச விசாரணை ஊடாக இனப்படுகொலை நடந்ததை நிரூபிக்க முடியும்
சர்வதேச விசாரணை ஊடாகவே இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதனை நிரூபிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சர்வதேச கண்காணிப்பாளர்களின் விசாரணை வேண்டும் என்பதே எங்களின் தொடர்ச்சியான வலியுறுத்தலாக இருந்து வருகின்றது.
யார் கொலைகளை செய்தார்களோ, யார் எமக்கு மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்தினார்களோ அவர்களே இதனை விசாரணை செய்வதும் அதற்கு தீர்ப்பு வழங்குவதுமான ஒரு நாடாக இலங்கை இருக்கின்றது.
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை எமது தொடர்ச்சியான கோரிக்கை. இதுவே அனைத்து தமிழ் கட்சிகளிலும் கோரிக்கையாகவும் இருக்கின்றது. சர்வதேச விசாரணை ஊடாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும் என தெரிவித்தார்.