கிணற்றில் தவறி விழுந்த குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை குளித்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக கிணற்றில் விழுந்து ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்தார்.
50 வயதுடைய, 5 பிள்ளைகளின் தந்தையான தும்பங்கேணி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசா பரமானந்தம் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர், நீரில் மூழ்கி உயிரிழந்த குழந்தையின் மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு வீட்டில் வந்து குளிக்கும் போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதேசவாசிகள் உடனடியாக, அவரை பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், மருத்துவர்கள் முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
பிரேத பரிசோதனை மேற்கொள்ள அவரது சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.