ஆபாச படம் பார்த்து 13வயது சிறுமி அதிர்ச்சி! அனுப்பிய 37வயதுடைய நபர் கைது!
ஆபாச படம் பார்த்து 13வயது சிறுமி அதிர்ச்சி
13 வயதுடைய சிறுமி ஒருவரின் தொலைபேசிக்கு ஆபாசவீடியோ அனுப்பிய 37 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆபாச வீடியோவினை பார்த்து சிறுமி அதிர்ச்சியடைந்தமையால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது,
கணேமுல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குறித்த 13வயது சிறுமி கல்வி கற்கிறார்.
அவருக்கு 37வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை குறுஞ்செய்திகள் அனுப்பியதுடன், ஆபாச வீடியோ ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி, பெற்றோரிடம் இதனை கூறியுள்ளார்.
அந்த இலக்கத்திற்கு பெற்றோர் தொடர்பு கொண்டு கதைத்த போது, இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தால் கொலை செய்வேன் என மிரட்டியுள்ளார். இதனை அடுத்து கணேமுல்ல பொலிசாரிடம் பெற்றோர் முறைப்பாடு செய்தனர்.
துரிதமாக செயற்பட்ட பொலிசார், ராகம பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆபாச வீடியோவை அனுப்பியதை ஏற்று கொண்டார்.
இதையடுத்து கம்பஹா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆபாச வீடியோவினை பார்த்த அதிர்ச்சியாலும், மனஅழுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட சிறுமி, கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.