யாழில் 15 வயது மாணவன் மாரடைப்பால் மரணம்!!
மாரடைப்பு காரணமாக யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10இல் கல்வி கற்கும் 15 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனலைதீவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபானந்தன் கிரிசிகன் எனும் குறித்த மாணவன் வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரியவருகின்றது.