பேரூந்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை தோட்டாக்கள் மீட்பு

பேருந்தின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டாக்கள் பண்டாரவளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பயணப்பையில் சிறிய இரும்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், இந்த தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து, நேற்று (சனிக்கிழமை) பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனைக்குப் பின்னர் 123 செயற்படக்கூடிய தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில்,

  • 113 பிஸ்டல் தோட்டாக்கள்
  • 9 T56 தோட்டாக்கள்
  • 1 T56 LMG தோட்டாக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபரீதச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை கைது செய்வதற்காக பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.