வட கிழக்கு தமிழரின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு – ஜனாதிபதி அறிவிப்பு
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று விசேட உரையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியும்.
மேலும், கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.