கிளிநொச்சி நகர் பகுதியில் வெளியேறும் மலக் கழிவு, அதிர்ச்சி காட்சிகள்!
கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவை 24மணி நேரத்திற்குள் அகற்றி சுகாதாரத்தை பேண தவறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி இ.கஜேந்திரா தெரிவித்துள்ளார்.
வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் கீழ் செயற்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலக்கழிவு வெளியேறுகின்ற நிலையில் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாதிருந்தது.
இதனால் பொது மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில் இன்றைய தினம் உரிய இடத்திற்கு விஜயம் செய்த கரைச்சி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோர் நிலைமைகளை நேரில் அவதானித்து உரிய அறிவுறுத்தகல்களை வழங்கியுள்ளனர்.