அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவல்
அம்பாறை – அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று(21) காலை தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸாரால் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.