யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூடு, ஒருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற சம்பவத்தில், சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார், மேலும் இன்னொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறித்துள்ளனர். இதற்கிடையில், பொலிஸாரின் கட்டளையை மீறி சாரதி வாகனத்தை செலுத்த முயன்றதால், பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார், மற்றைய நபர் வாகனத்திலிருந்து பாய்ந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. காயமடைந்த நபரை பொலிஸார் கைது செய்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பாதுகாப்புடன் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை, தப்பிச் சென்ற நபரை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளதுள்ளனர்.