PUCSL தலைவரை நீக்கும் செயல்முறையை அரசாங்கம் தொடங்குகிறது
(LBC தமிழ்) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் தெரிவித்தார்.
புதிய மின்சாரக் கட்டணக் கட்டமைப்பிற்கு PUCSL அங்கீகாரம் வழங்கினால், அன்றைய தினம் முதல் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்சார சபையால் முடியும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.