வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

தொடங்கொடை வில்பத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று அதிகாலை (புதன்கிழமை) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டின் ஜன்னலுக்கு எதிராக நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக களுத்துறை பிராந்திய குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொடங்கொடை பொலிஸார் இந்த சம்பவத்தைப் பற்றி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.