யாழ் பல்கலை பீடாதிபதியின் உடல் மருத்துவபீடத்திற்கு தானம்
மறைந்த யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதி வைத்திய கலாநிதி இராஜேந்திர பிரசாத்தின் உடல் மருத்துவ பீடத்திற்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
கற்பித்த ஆசிரியர் இன்று கற்பித்தல் கருவியானார். உணர்வுமிகு தருணம். அஞ்சலிப்போம் என மாணவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி வைத்தியகலாநிதி இராஜேந்திர பிரசாத் இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அவர்களின் உடல் அவர் பணியாற்றிய மருத்துவ பீடத்தின் உடற்கூற்றியல் துறைக்கு தானமாக வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.