யாழ் பல்கலை பீடாதிபதியின் உடல் மருத்துவபீடத்திற்கு தானம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவபீட பீடாதிபதி வைத்திய கலாநிதி இராஜேந்திர பிரசாத் இன்று காலமானார்.
அவரது உடல், அவர் பணியாற்றிய மருத்துவ பீடத்தின் உடற்கூற்றியல் துறைக்கு தானமாக வழங்கப்பட்டது.
மாணவர்கள், “கற்பித்த ஆசிரியர் இன்று கற்பித்தல் கருவியானார். உணர்வுமிகு தருணம். அஞ்சலிப்போம்,” என்று அவரது நினைவுகளுக்கு அஞ்சலியைத் தெரிவித்துள்ளனர்.