சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 2,137 சங்குகளுடன் ஒருவர் கைது
புத்தளம், கற்பிட்டி, பராமுனை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 2,137 சங்குகளுடன் 33 வயதுடைய சந்தேக நபர் நேற்று (14) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடல் வழியாக நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடைபெற்றது.
கைது செய்யப்பட்ட நபர் புத்தளம், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரிடமிருந்து மீன்பிடி படகு மற்றும் 15 மூடைகளில் அடங்கிய 2,137 சங்குகள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.