போதைப்பொருள் விற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
வெளிநாட்டில் உள்ள பெண் ஒருவருக்கு சொந்தமான ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2,590 மில்லி கிராம் (13 பொதிகள்) ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றபட்டுள்ளது.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.