தேசிய தலைவராக நாட்டில் பிளவுகளை குறைக்க பாடுபட்டவர் சம்பந்தன் – இரங்கல் செய்தியில் ஜனாதிபதி
பெரும் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு தேசிய தலைவராக இலங்கையில் ஏற்பட்ட பிளவுகளை குறைப்பதற்காக அயராது பாடுபட்டவரென இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தனின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தேசிய தலைவராக, நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளை குறைக்க அயராது பாடுபட்டார்.
அவரது இழப்புக்கு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கும்மென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.