இன்று முதல் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
இன்று முதல் லங்கா சதொசவில் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி உள்நாட்டு உருளை கிழங்கு ஒரு கிலோ 430 ரூபாயில் இருந்து 35 ரூபாய் குறைக்கப்பட்டு 395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோ வெள்ளை சீனி 278 ரூபாயிலிருந்து 3 ரூபாய் குறைத்து 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளை அரிசி 179 ரூபாயிலிருந்து 5 ரூபாய் குறைத்து 174 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ சம்பா அரிசி 228 ரூபாயிலிருந்து 8 ரூபாய் குறைத்து 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ கிராம் கடலை 35 ரூபாயால் குறைக்கப்பட்டு 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.