மன்னார் நீதிமன்றில் இருவரை சுட்டு தள்ளியவர்கள் இவர்கள்தான், உதவி கேரும் பொலிசார்

மன்னார் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (16) இருவரை சுட்டு கொலை செய்த சந்தேக நபர்கள் இருவரையும் அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.

தற்போது சந்தேக நபர்களை அடையாளம் காண புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் கடுமையாக பணியாற்றி வருகின்ற நிலையில் குறித்த சந்தேக நபர்களின் வரைபடங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

படத்தில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடன் அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய மன்னார் தலைமையக பொலிஸ் அதிகாரியின் 0718591363 எனும் இலக்கத்திற்கு அல்லது மன்னார் பொலிஸ் நிலையத்தின் 0232223224 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.