திருகோணமலை படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 7 பேர் பலி!

திருகோணமலை – கிண்ணியா,  குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவை படகு உடைந்து, கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பயணித்த படகே இன்று (23) காலை விபத்துக்கு உள்ளானது.

குறித்த படகில் பயணித்த மேலும் 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்தில்  6 மாணவர்கள் பலியானதாக தகவல் வெளியான நிலையில், தற்பொழுது பாடசாலை மாணவர்கள் 4 பேர் உட்பட 7 பேர் பலியானதாக   கூறப்படுகின்றது.

அத்துடன் துடன் 11 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் நால்வர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

படகின் கொள்ளவை மீறி பயணிகளை ஏற்றி சென்றமையாலேயே விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.